நாயகி
Tuesday, February 25, 2020
பள்ளி வகுப்பறையில்... .
டீச்சர்: "சுரேஷ் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"
சுரேஷ் : "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும்.
எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்...
எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்....
உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.
டீச்சர்: "போதும் சுரேஷ் ! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...
பூமிகா நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?
பூமிகா: "சுரேஷ் க்கு பொண்டாட்டியாக!!!"
பெண்கள் எப்பவும் உஷார்..தான்..
Sunday, February 23, 2020
கவிதை
ஒட்டி வைத்தது போல்
இரு கண்கள்...!
களவெடுத்து வானவில்லில்
கறுப்பு வண்ணமிட்டது போல்
இரு புருவங்கள்...!
தங்க கிண்ணங்கள் இரண்டு,
உன் அங்கத்தில்
இரு கன்னங்களாய்...
தேன் கூட்டில்
மவுன பூட்டுகளாய்
உன் உதடுகள்...!
உன் மவுனம் கலைக்கும்
முயற்சிகளில்
உன்னை நான்
ரசிக்கவும் தவறவில்லை...!
என் பார்வைகள்
உன்னை உரச,
உன் தாவணி கோபுரத்தில்
தடுக்கி விழுந்த
என் கண்களை - நீ
தண்டிப்பது எப்போது...?
இன்னும்
மவுனத்தாலே
பேசிக்கொண்டிருக்கிறாய் நீ...
உயிர் மெய்கள்
உன் உள் நாக்கிலே
உயிர்விட
நானோ
செத்துப்பிழைக்கிறேன்...!
உன் சிறு துளி மவுனம்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல துடிக்க,
இன்னும் எனக்கு
மெல்ல மெல்ல
உயிர் தந்து கொண்டிருக்கிறது
உன் ஒரு துளி புன்னகை....
Subscribe to:
Posts (Atom)

